மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளைத் தாண்டிய முன்னேற்றம் நிச்சயம் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. உங்கள் கனவுகள் மெய்ப்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிட்டும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் வர உள்ளவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கலாம் சிக்கனம் தேவை. ஆரோக்கியம் நலம் தரும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பயணங்கள் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத நபர் ஒருவரை சந்திப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் போட்டிகளை விடுப்பது நல்லது. ஒருவரை ஒருவர் அனுசரித்து புரிந்து கொள்ளுங்கள். சுய தொழில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கடமையிலிருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. கொடுத்து வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கைக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கருத்துக்கள் மதிக்கப்படாமல் போகலாம். வேகத்தை காட்டிலும் விவேகத்தை கடைபிடிப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் மிகுந்த செயல் உற்சாகத்தை கொடுக்கும். கணவன் மனைவி இடையே அன்பு, அக்கறை அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டார அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிரடியான திருப்பங்கள் நடக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஆற போடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய வேலைகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய வேண்டாம். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது போல உங்களுடைய பொறுமைக்கு இருக்கும் மதிப்பு அதிகம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணிகள் தொய்வு நிலையில் இருக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படும் விழிப்புணர்வு தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகளை படைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை தாண்டிய முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ள நீங்கள் விடாமுயற்சியின் மூலம் ஏற்றம் காணலாம். இறை நம்பிக்கை அதிகரித்து காணப்படும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யாருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். எவரையும் மட்டம் தட்ட வேண்டாம். முடிந்தால் உங்களுடைய ஆற்றலை நண்பர்களுக்காக உபயோகமான முறையில் பயன்படுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் தொந்தரவு நீங்கும். சுய தொழிலில் லாபம் காணும் யோகம் உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் நினைத்தது நடக்க காலதாமதம் ஆகலாம். சுப காரிய தடைகளில் இருந்து வெற்றி காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சில இழப்புகள் நேரலாம் எனவே கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் எனவே விழிப்புணர்வு தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. அனாவசிய பேச்சு வார்த்தைகளால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறைவு உண்டாக்கலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகள் வீண் போகாது. மற்றவர்களை கேட்காமல் சுய முடிவு எடுப்பது ஆபத்தை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் ஆடம்பர பொருட்களை கையாளுவதில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும்.