எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பணிப்புறக்கணிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புக்கு எதிராக அதன் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று (18) சுகயீன விடுமுறை பெற்று தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.