மேஷம்:
மேஷத்தில் பிறந்த நீங்கள் இன்று எப்பொழுதும் அமைதி காப்பது நல்லது. உங்களை எதிர்ப்பவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். சுய தொழில் செய்பவர்கள் முக்கிய விஷயங்களில் முடிவெடுக்கும் பொழுது ஒரு முறைக்கு பலமுறை சிந்திப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்த நீங்கள் இன்று புதிய முயற்சிகளில் வெற்றி பெற இருக்கிறீர்கள். வீண் வம்புக்கு செல்லாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் கூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாக்கு சுத்தம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்த நீங்கள் இன்று எதிர்பாராத திடீர் திருப்பங்கள் வர வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும் வாய்ப்பு உண்டு. தொழில் செய்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். விருத்தி உண்டாக புதிய உத்திகளை கையாளுங்கள். உத்தியோகத்தில் தேவையான சலுகைகள் கிடைக்கும். உடல் நலன் தேறும்.
கடகம்:
கடகத்தில் பிறந்த நீங்கள் இன்று தேவையற்ற கலகங்களில் மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் குறை இருக்காது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அந்நியர்களிடம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்த நீங்கள் இன்று புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியுடைய பேச்சு வார்த்தையில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் ஆக்கத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு ஏற்ப செலவுகளும் வந்து சேரலாம். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்த நீங்கள் இன்று எடுக்கும் முயற்சிகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே விரிசல் விழலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புகழ் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இனம் புரியாத அச்சம் வந்து செல்லும்.
துலாம்:
துலாத்தில் பிறந்த நீங்கள் இன்று துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் நிறைவு ஏற்படும். சுபகாரிய தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்த நீங்கள் இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய அனுபவங்களை பெற இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகன ரீதியான பயணங்களில் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அவ்வபோது சிறு குறைகள் தோன்றி மறையும்.
தனுசு:
தனுசில் பிறந்த நீங்கள் இன்று முன்னேற்றத்தை சந்திக்க இருக்கிறீர்கள். நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கலாம் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய நட்பு வட்டத்தை உருவாக்கும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்து சில அதிருப்தி உருவாகலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்த நீங்கள் இன்று உங்களுடைய நிதானத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சிறு இடையூறுகள் வந்து செல்லும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இன்று திட்டமிட்டு எந்த ஒரு காரியத்தையும் செய்தால் பதட்டம் இருக்காது. ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்த நீங்கள் இன்று உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரத்தை பெற போகிறீர்கள். விமர்சனங்களை தாண்டிய வரவேற்பு உங்களை மகிழ்ச்சி படுத்தும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் உயரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறு சிறு குறைகள் நீங்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்த நீங்கள் இன்று மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எந்த ஒரு முடிவையும் குழப்பம் இல்லாமல் நிதானமாக எடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.