பியகம கண்டி வீதி பட்டிவில பிரதேசத்தில் சிறு வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக அந்த வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
பட்டிவில சந்தியிலிருந்து பியகம சந்தி வரையான சுமார் 2 கிலோமீற்றர் வரையான பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி பியகம கண்டி வீதியின் பட்டிவில பிரதேசத்தின் ஊடாக செல்லும் சாரதிகளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக களனி ஆறு நிரம்பி வழிவதால் களனி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 226 மல்வானை கொழும்பு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
அத்துடன், பாலும்மஹர தொடக்கம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே வரையிலான நவ கண்டி வீதி சியம்பலாப்பே சந்திப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சிறிய வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.