பெரும் மோசடிதொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி திடீரென கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு கைவிலங்கு இல்லாமல் சென்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோடீஸ்வர வர்த்தகர்கள் உட்பட சமூகத்தின் உயர்தர வகுப்பினரை ஏமாற்றி கொழும்பு உலக வர்த்தக நிலையத்தில் அலுவலகம் நடத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி இன்று பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு கோட்டை உலக வர்த்தக நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கைவிலங்கின்றி திலினி பிரியமாலி
அதேவேளை வழமையாக விளக்கமறியலில் வைக்கப்படும் சந்தேகநபர்கள் கைவிலங்குடன் வெளியே அழைத்துச்செப்படும் நிலையில், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுடன் திலினி பிரியமாலி உலக வர்த்தக நிலையத்திற்கு வந்த போது கைவிலங்கிடப்படாமல் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
CID அதிகாரிகள் அவளை உலக வர்த்தக மையத்தின் மேற்கு கோபுரத்தின் 34 வது மாடியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த விசாரணை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவும், அலுவலக வளாகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்யவும், விசாரணை தொடர்பான ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் எடுத்துச் செல்லவும் திலினி பிரியமாலி இவ்வாறு உலக வர்த்தக மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.