இலங்கையில் எதிர்வரும் 4 நாட்களுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்ப்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, நாளை (11) முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையான தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும், இரவு வேளயைில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.