காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர முயற்சித்தவர்களிடம் பொலிஸார் மோசமாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸாருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களை நினவுகூர நேற்று காலிமுகத்திடலில் மக்கள் கூடியிருந்தனர்.
இதன்போது பிள்ளைகளுடன் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்களிடம் பொலிஸார் கடுமையாக நடந்துக்கொண்டதுடன் அவர்களது மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் அச்சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டுமென பொதுமக்களிடம் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.