உரப் பையில் இருந்து மீட்கப்பட்டு குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம் ஆனமடுவ திபுல்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதோடு திபுல்வெவ ஏரிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து குழந்தை உரப் பை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அருகில் மறைந்திருந்த 25 வயதுடைய நபர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையை கடத்தியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.