உலக அளவில் பலவகையான ஹோட்டல்கள் தமது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கையில் நீர் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்று விசித்திரமாக உணவைப் பரிமாறி வருகிறது.
மணலை வேகமாக அள்ளுவதற்கு சவள் என்று சொல்லப்படும் கருவி கட்டட நிர்மான வேலைகளில் பயன்படுவது அனைவர்க்கும் தெரிந்ததே.
அதே போன்ற ஒரு கருவியில் நண்டு, இறால், கணவாய் மீன் உள்ளிட்ட கடல் உணவை சமைத்து பரிமாறி வருகின்றனர்.
8500 ரூபா முதல் அவை விற்பனை செய்யப்படுகிறது.
அண்மையில் குறித்த ஹோட்டலுக்கு சென்ற பெண் இந்த உணவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது