பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவனுக்கு ஹெரோயின் வழங்குவதற்கு முற்பட்ட மனைவி சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான மனைவியை எதிர்வரும்5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி காலி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் லலித் பத்திரன உத்தரவிட்டார்.
கட்டைக் காற்சட்டைப் பையில் ஹெரோயின்
அம்பலாங்கொட, மஹருப்ப வீதியில் வசிக்கும் 32 வயதான பெண்ணே இவ்வாறு மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இப்பெண் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவனுக்கு வழங்கவென கொண்டு வந்த பார்சலில் இருந்த கட்டைக் காற்சட்டைப் பையில் ஹெரோயின் இருந்ததை சிறைக் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.