A – 9 வீதி – முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
உணவகம் ஒன்றிலிருந்து ஏ9 வீதியை கடந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன், அதே திசையில் நேராக பயணித்த கார் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தின்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே காயங்களிற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியன பலத்த சேதங்களிற்குள்ளாகியுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.