சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அதிக துர்நாற்றம் வீசுவதாக அதனை அண்மித்து வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அதிக துர்நாற்றம் வீசுவதுடன், தமது அன்றாட நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தவிடயம் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் அதிகாரிகளுக்கு தெரியப்படுதியுள்ளதாக பியகம பிரதேச சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் புகையில் கந்தகத்தின் அளவு அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.