சட்டவிரோதமான முறையில் தங்கத்தை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 04 விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (30) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 17 கோடி ரூபா பெறுமதியான 08 கிலோ 500 கிராம் எடையுள்ள தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று காலை 7.40 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து Oman Airline விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய தம்பதியரும் 50 வயதுடைய நபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கொழும்பு மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவர் உடலில் மறைத்து வைத்திருந்த சுமார் 01 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் நான்கு தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான வகையில் இக்குழுவினரின் நடமாட்டத்தை அவதானித்த சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சோதனையிட்ட போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது