தேசிய சபை என அழைக்கப்படும் புதிதாக நிறுவப்பட்ட பாராளுமன்றக் குழு இன்று (29) முதல் முறையாக கூடவுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் தேசிய சபை கூடவுள்ளதுடன், தேசிய பேரவையின் அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசிய சபையை நிறுவுவதற்கான பிரேரணைக்கு கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.
சபாநாயகர் தலைமையில் இடம்பெறும் சபையில் பிரதமர், சபைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் மற்றும் பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் உள்ளிட்ட 35 இற்கு குறைந்த உறுப்பினர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இன்று நடைபெறவுள்ள தேசிய சபையில் தான் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இன்று பல பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதால், பாராளுமன்றத்தில் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.