நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 03 ஆவது மின் உற்பத்தி இயந்திரத்தை மீளப் பெறுவதற்கு 03 முதல் 05 நாட்கள் வரை ஆகும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை அறிவித்துள்ளார்.
எரிபொருள் மின்நிலையங்களை பயன்படுத்தி நிலைமையை நிர்வகிப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தற்போது ஆலோசித்து வருவதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.