மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் படத்தை அரசு குடும்பம் இப்போது டுவிட்டரில் பகிர்ந்து உள்ளது. கடந்த 8 ஆம் திகதி பிரிட்டன் ராணி எலிசபெத் தனது 96 வயதில் உயிரிழந்தார்.
ராணியின் மறைவைத் தொடர்ந்து அங்கு 10 நாட்கள் அரசு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ராணி எலிசபெத் உடலுக்குப் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
ராணி எலிசபெத் உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்ட இடத்தில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவருக்கு மதச் சடங்குகள் நடத்தப்பட்டன.
அங்கிருந்து தனியாக வாகனம் ஒன்றின் மூலம் வின்ட்சர் கோட்டைக்கு ராணியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இருந்த போதிலும், அவரது உடல் அங்கு முதலில் புதைக்கப்படவில்லை. ராணியின் உடல் ரோயல் வால்ட்டில் ( royal vault) இறக்கப்பட்டது.
முக்கிய அரசு குடும்ப உறுப்பினரின் உடல்கள்
ரோயல் வால்ட் என்பது வின்ட்சர் கோட்டையில் புனித ஜார்ஜ் தேவாலயத்தின் கீழே சுமார் 16 அடி ஆழத்தில் அமைந்துள்ள ஒரு அறையாகும். இங்கு 200 ஆண்டுகளாக உயிரிழந்த சில முக்கிய அரசு குடும்ப உறுப்பினரின் உடல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இதனிடையே இப்போது ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் படத்தை அரசு குடும்பத்தினர் தங்கள் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளனர்.
மேலும், “மன்னர் ஆறாம் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணி எலிசபெத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கல் ஒன்று நிறுவப்பட்டது” எனவும் பதிவிட்டுள்ளனர்.