பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பிரதேசத்தில் மன்னா கத்திகளாலும் வாள்களாலும் தாக்கி மூன்று வீடுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் ராகம பொலிஸ் நிலையத்தில் 03 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
குறித்த சம்பவம் ராகம பொலிஸார் நேற்று (25) பிற்பகல் மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் விசாரணையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம, மகுல் பொகுன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ராகம கிம்புல எல பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (26) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.