ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சமர்ப்பித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான தற்போதைய நிலைமை, பொருளாதார நெருக்கடி, உணவு, ஔடதங்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பன தொடர்பில் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.