அரிசி உட்பட இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் கன உலோகங்கள் உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சோதனைச் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக சுற்றாடல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
மனித பாவனைக்கு தகுதியற்ற அரிசி
அதேவேளை பதினைந்து கொள்கலன் அரிசி மனித பாவனைக்கு தகுதியற்றதாக இருந்ததால் அண்மையில் திருப்பி அனுப்பப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.