சமகால அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, முதற்கட்டமாக கட்சியில் உள்ள பதவிகளில் இருந்து அவர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டு கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக செயற்படும் எவரையும் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.