இரத்மலானை பெலக்கடே வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆயுதமேந்திய இருவர் கொள்ளையடித்துள்ளனர்.
திருடர்கள் கைத்துப்பாக்கியைக் காட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்களை அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 1,158,000 ரூபாவுக்கும் அதிகமான தொகை அவர்கள் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்த இரு சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.