எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ரஷ்யாவின் மாஸ்கோவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதனை விமான சேவையின் இலங்கை பிரதிநிதி நிறுவனமான Moldaviana Aviation நிறுவனத்தின் தலைவர் கலாநிதி தர்மதாச விக்ரமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு வர்த்தக நீதிமன்றம் உத்தரவு
ஜூன் 2 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த Aeroflot நிறுவனத்துக்குச சொந்தமான Airbus A330 விமானத்தை தடுத்து வைக்குமாறு கொழும்பு வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டதைடுத்து, ரஷ்ய Aeroflot Airlines இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியிருத்தமை குறிப்பிடத்தக்கது.