நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு கொலைகள் பதிவாகியுள்ளன.
நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஒருவர் நேற்று மாலை எல்லக்கல பிரதேசத்தில் மரத்தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மேலும் இருவருடன் மது அருந்திய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இருவர் மரக் கம்பத்தால் பாதிக்கப்பட்ட நபரைத் தாக்கியுள்ளனர். காயமடைந்த நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலையில் இடம் பெற்ற சம்பவம்
இதேவேளை, இன்று அதிகாலை திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் கூரிய பொருளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மற்றொரு குழுவுடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.