2022 க.பொ.தா உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி சாதனை அளவை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் ஆதரவு கருத்தரங்குகளை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அறிவுறுத்தலுக்கு அமைய கருத்தரங்குகள் நடத்தப்படும் என கூறப்படுகின்றது.
மேலும் அறிவியல், வணிகம், தொழில்நுட்பம், கலை என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பொதுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வளங்களின் பங்களிப்புடன் நாடு முழுவதும் இந்தக் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன