மஸ்கெலியா பகுதியில் இருந்து கரவனெல்ல பகுதிக்கு 10 ஆடுகள் வாகனம் ஒன்றில் அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து அந்த வாகனத்தை பொலிஸார் மடக்கி பிடித்தனர்.
இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ஆடுகள் அனுமதி பத்திரம் இன்றியும்,மிருகவதை சட்டபடியும் மிருக வைத்திய அதிகாரி மூலம் வழங்கபட்ட அனுமதி பத்திரம் இல்லாத நிலையில் மஸ்கெலியா பொலிசார் கைது செய்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சந்தேக நபர்கள் மற்றும் வாகனத்தையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.