மறைந்த பிரித்தானிய ராணியாரின் விருப்பமான மலரான வெள்ளை அல்லியை, ராணியின் அஞ்சலிக்காக பிரித்தானியர்கள் அதிகம் வாங்குவதனால் அங்கு மலர் விற்பனை அதிகரித்துள்ளது.
எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தும் நிமித்தம் பிரித்தானியர்கள் மலர்களை வாங்கி குவித்துள்ளனர். இதன் காரணமாக ராணியின் மறைவையடுத்து மலர்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் பிற அரச இல்லங்களுக்கு வெளியே ஏற்கனவே அட்டைகள், பூக்கள் மற்றும் பொம்மைகளை வைத்து வருகின்றனர்.
பரபரப்பான மலர் விற்பனை
இந்நிலையில் ராணி காலமானதை தொடர்ந்து மலர் விற்பனை பரபரப்பாக நடக்கிறது என விற்பனையாளரான ஆல்பர்ட் டீன் கூறுகிறார். மேலும் பிரித்தானிய மக்கள் நிறைய ரோஜா மற்றும் கிரிஸாந்தமம்கள் பூக்களை வாங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரிட்டிஷ் பூக்கடை சங்கம் தெரிவிக்கையில், ராணியாரின் விருப்பமான மலரான வெள்ளை அல்லிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 1997ல் டயானா இறந்த பிறகு, பக்கிங்ஹாம் மற்றும் கென்சிங்டன் அரண்மனைகளில் கிட்டத்தட்ட 60 மில்லியன் பூங்கொத்துகள் மொத்தமாக இருந்தன.
அது போல ராணியாரின் இறுதிச்சடங்குக்கு முன் மலர்களின் தேவை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என கருதுவதாகவும் பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுகின்றது.