கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நான்காவது இளைஞரும் உயிரிழந்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி, கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அத்துடன் சம்பவத்தில் மேலும் 2 இளைஞர்கள் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த 27 வயதான எம்.எச்.எம். அல்பாப் என்ற இளைஞர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய 18 வயது சாரதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.