கொடிகாம் ஏ-9 வீதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று விபத்துக்குள்ளானது.
கொழும்பிலிருந்து சாவகச்சேரி நோக்கி வந்த கார் கொடிகாமத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த டயர் கடையுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
எனினும் குறித்த விபத்தில் கார் மற்றும் டயர் கடை என்பன பகுதியளவில் சேதமடைந்த போதிலும் காரில் பயணித்தோர் காயங்கள் ஏதுமின்றி தப்பியமை குறிப்பிடத்தக்கது.