மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வந்து சேரக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது அதைவிட சிறந்த ஒன்றாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வலிமை பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்தது நடக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு காரியம் நடக்கப் போகிறது. சுபகாரிய தடைகள் விலகி மனதிற்கு பிடித்தவர்களால் அனுகூல பலன்கள் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறை இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய நண்பர்களின் மீது அதிக நம்பிக்கை வைப்பதில் கவனமாக இருப்பது நல்லது. உடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் பெருகும் என்றாலும் செலவுகள் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பண நெருக்கடி வரலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போக்குவரத்து தொடர்பான விஷயங்கள் மூலம் எதிர்பாராத திடீர் லாபம் வரலாம். வாகனத்தை சரியாக பராமரித்து வைத்துக் கொள்ளுங்கள். தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சமூக பார்வை மாறும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மிகப் பெரிய பிரச்சனைகளும் சுலபமாக முடியக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேரலாம் எனவே கவனம் தேவை. குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் முனைப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராதது நடக்கும். இடியாப்ப சிக்கல் போல இருக்கும் பிரச்சனைகளும் ஒன்றும் இல்லாமல் போக வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்பின் தெரியாதவர்கள் மூலம் அதிர்ஷ்டம் வரும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையும், துணிச்சலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பல திருப்பங்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. முக்கிய முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் செய்யுங்கள். புதிய தொழில் துவங்குவதில் இருந்து வந்த சிக்கல்கள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும் என்றாலும் மற்றவர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும், புதிய உற்சாகம் பிறக்கும் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் உடைய ஆதரவு தேவை எனவே விட்டுக் கொடுத்து சொல்லுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற அறிவுரைகளை யாருக்கும் வழங்காதீர்கள். நீங்கள் ஒன்று செய்ய அது ஒன்று உங்களுக்கே ஆபத்தாக வந்து சேரலாம். கணவன் மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பங்கள் நீடிக்கும் எனவே அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்வது தான் சரி என்று நினைப்பதில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க கூடும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்து முடிவெடுப்பது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய வேண்டாம். சுய தொழிலில் லாபம் உயரும். வியாபார விருத்தி உண்டாக புதிய யுக்திகளை கையாள முயற்சி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் வலுபெறும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற பகைவர்களை வீணாக வளர்த்துக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இடையே இருந்து வந்த சிறு சிறு ஊடல்கள் நீங்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய பணியில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.