இன்று இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலேயே இலங்கை அணி வெற்றி பெற்று ,ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்து.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இருபது ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தான் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியானாகியுள்ளது.