மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிரியமானவர்கள் மூலம் சில நன்மைகள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக்கூடிய இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் பொறுமையாக இருந்து மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடனும், தைரியத்துடன் இருக்க வேண்டிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே ஆடம்பரத்தை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களில் கவனம் தேவை. ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களுடைய மனதை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து விடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பது நிறைவேறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்தையும் பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. பொருளாதாரம் ஏறுமுகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். தேவையற்ற பகைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் செலவுகள் ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மட்டும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பிரியமானவர்களின் உறுதுணையை எதிர்பார்ப்பது நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை நிலவி வந்த பிரச்சனைகள் மாறும். ஆரோக்கிய மேம்பாடு இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த கேள்விகளுக்கான விடை கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தீராத குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுய மதிப்பீடு தேவை. கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நடப்பவை யாவும் நன்மையாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பணிகளில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேற்றுமை மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் சுமக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த இலுப்பறி நிலை மாறும். குடும்ப விவகாரங்களில் கூடுதல் பொறுப்புணர்வுடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் மிகுந்த செயலால் அனுகூலமான பலன்கள் பெற போகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்தது சாதகமாக முடியக்கூடும். புதிய விஷயங்களை பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்றும் சிறப்பாக இருக்கப் போகிறது இதனால் வீட்டு தேவைகள் எளிதாக பூர்த்தி அடையும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மெல்ல மெல்ல மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் யாருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வம்பு, வழக்குகள் வரக்கூடும் எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே புதிய புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனையை உடனுக்குடன் கவனியுங்கள்.