கொட்டவில பிரதேசத்திலுள்ள மரண வீடொன்றுக்குச் சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இரவுநேரரோந்து பணியில் ஈடுபடாமல், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது