அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் பங்குதாரர்களின் பங்கேற்புடன் தேசிய எரிபொருள் கடவு QR முறையை மீளாய்வு செய்வதற்காக இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவருடைய கருத்துக்கள்
தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் கீழ் எரிபொருளைப் பெறும்போது உருவாக்கப்படும் குறுஞ்செய்தியில் எரிபொருள் நிரப்பு நிலையக் குறியீடு அடுத்த வாரம் முதல் சேர்க்கப்படும்.
தேசிய எரிபொருள் QR முறைமையை சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வாரம் குறிப்பிட்ட தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு அதிகரிப்புக்கான சிறப்பு வகை சோதனை செய்யப்படும்.
எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுக்கான தானியங்கு அறிக்கைகள் இன்று முதல் கிடைக்கப்பெறும் அதேவேளை பொதுமக்களுக்கான டேஷ்போர்டும் கிடைக்கப்பெறும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.