2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (05-09-2022) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன,
நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அதற்கான பரீட்சைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதாகவும், பல பாடங்களின் மதிப்பீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்