உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதை அடுத்து, பல ஐரோப்பிய நாடுகள் நீண்ட குளிர்காலத்திற்குத் தயாராவதற்கு அவசர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்ய எரிவாயு விநியோக தடையால் நேரடியாக மற்றும் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஜேர்மனி, மக்கள் மற்றும் வணிகங்கள் உயரும் விலையைச் சமாளிக்க உதவும் வகையில் 65 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
எதிர்வரும் மாதங்களில் எரிசக்தி செலவுகள் உயரும் என்ற எதிர்பார்ப்புகளின் மத்தியில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.