மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல திருப்பங்கள் ஏற்படக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியம் தாமதப்படுத்தலாம் இதனால் கவலை தேவையில்லை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதி நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதுரியமான பேச்சு வெற்றி வாகை சூட வழி வகுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்த காரியத்தில் சிறு சிறு இடையூறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனினும் மனதை தளரவிடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் கடன் வாங்க கூடிய சூழ்நிலை ஏற்படலாம் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு கலகலப்பான சூழ்நிலை இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் வருவதற்கு தாமதம் ஆகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேலை செய்பவர்களிடம் திருப்தியான சூழ்நிலை இருக்கும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்களின் பொழுது விழிப்புணர்வு தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். பொருளாதார ரீதியான சிக்கல்கள் படிப்படியாக நீங்கும். கணவன் மனைவி இடையே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முயற்சிகள் சாதக பலன் கொடுக்கும். உபயோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புத்தி கூர்மை அதிகரித்து காணப்படும். மற்றவர்களுடைய விஷயங்களில் நீங்கள் சரியான முடிவு எடுக்க வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி இடையே அக்கறை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்றம் தேவையானவைகளை பூர்த்தி செய்ய உதவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படலாம் கவனம் வேண்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முன்னேற துடிக்க கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே ஆற அமர்ந்து பேசி எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய நண்பர்களுடன் பழகும் பொழுது கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானத்துடன் முடிவெடுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் அவசரமாக கையாள வேண்டாம். புதிய தொழில் துவங்கும் மேலோங்கி காணப்படும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரும் சீரான பாதையில் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய வாய்ப்புகள் அமையும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப விவகாரங்களில் பொறுமையை கையாளுவது நல்லது. கணவன் மனைவி இடையே திடீர் வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விலகி சென்றவர்களும் விரும்பி வந்து சேர வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் தடுமாற்றம் ஏற்படலாம். மனதை அலைபாய விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விலகி நின்று வேடிக்கை பார்க்காமல் எந்த ஒரு விஷயத்திலும் முன் நின்று உங்கள் தரப்பு கருத்துக்களை முன் வைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே பொறுமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் நிதானம் வேண்டும். நினைத்தது நினைத்தபடி கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை மட்டம் தட்டாமல் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். பிரியமானவர்கள் மூலம் சில பண உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே வீண் பேச்சு வார்த்தைகளை விட்டு விடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆன்மீக ஆர்வம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சாதுரியமாக கையாளுங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். சுய தொழிலில் ஏற்ற இறக்கத்துடன் பொருளாதார இருக்கும் எனினும் அதை திறம்பட கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் உங்களுக்கு பணி சுமையை ஏற்படுத்தும். ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சியப்படுத்தாமல் உடனுக்குடன் கவனிப்பது நல்லது.