மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப பிரச்சனைகள் அகழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் நினைத்த இடத்திலிருந்து நினைத்த பணத்தொகை வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணியது ஈடேற காலதாமதம் ஆகலாம். எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுங்கள். ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமையான விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை நம்பி வாக்கு கொடுக்க வேண்டாம். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு துறைசார் நிபுணர்களின் ஆலோசனை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலைசல் இருந்தாலும் உங்களுடைய பணிகளை சரியாக செய்து முடிக்க போராடுவீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வாழ்க்கையில் முன்னேற கூடிய அமைப்பாக இருக்கிறது. திட்டமிட்ட காரியங்களை சிறப்பான முறையில் செய்து முடிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் வெற்றி வாய்ப்புகள் கைநழுவி போகாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மறையும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முழுமூச்சாக எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உறுதியான முடிவுகள் எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற வார்த்தைகளை விட்டு விட வேண்டாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தளராத முயற்சி மற்றவர்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தும். தேவையற்ற விமர்சனங்களை கருத்தில் கொள்ள வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும் எனவே முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் சில பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்திலும் குறுக்கு வழியில் சிந்திக்காமல் இருப்பது நல்லது. வீண் வம்புகளை விலைக்கு வாங்க வேண்டாம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுதல் நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கத்தை திறம்பட சமாளிப்பீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் போக வேண்டிய பாதையை தீர்மானிக்க கூடிய சந்தர்ப்பங்களை பெறுவீர்கள். திருமணம் குறித்த தடைகள் விலகும். கணவன் மனைவிக்குள் விரிசல் விழாமல் இருக்க அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில் இடையூறுகள் தளரும். நினைத்ததை அடைய பொறுமை தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசி விடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் வரக்கூடும் என்பதால் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே எதிலும் விட்டுக் கொடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்ப விவகாரங்களில் மூன்றாம் மனிதர்களை தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவியிடையே புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடுமையான உழைப்பு நல்ல பலன் கொடுக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்கள் புதிய அனுபவங்களை கொடுக்கும் வகையில் இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும். வசூல் ஆகாத பழைய பணம் வசூல் ஆகும். குடும்பத்தில் சகோதரர்களுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த மன நிம்மதி கிடைக்கும் இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடைவதில் சிறு சிறு தடைகள் ஏற்படலாம். சுப காரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிடல் அவசியமாகும். அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். கணவன் மனைவியிடையே பேச்சில் இனிமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுக்கள் குவியும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொருட் சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியம் குறித்த விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.