கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகம ஏரியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
நீராடும்போது நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்த மாணவி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் லிகொலவெவ, மஹகல்கத்வார பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.