மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்காத பிரச்சினை நீங்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் தம்பதியருக்குள் ஒற்றுமையை இழக்காமல் இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது தான் சரி என்று நினைக்க வேண்டாம். தீர விசாரித்து எந்த ஒரு முடிவையும் எடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருக்கும் கவலைகள் நீங்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதில் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். தொழில் விருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமையை வெளி உலகத்திற்கு நிரூபிக்க வேண்டிய காலமாக இருக்கும். பல விமர்சனங்களை தாண்டிய முன்னேற்றம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் உண்டாகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பாக இருப்பதால் நீங்கள் எந்த ஒரு விஷயத்தை அவசரப்படாமல் முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் வம்பு வழக்குகள் வரக்கூடும் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு விஷயம் நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். ஆரோக்கியம் சீராகி வரும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நற்பலன்கள் கொடுக்கக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். நினைத்தது பலிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் திடீர் தன லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இழுப்பறியில் இருந்த வேலை சுலபமாக முடியும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்கவும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடிய அமைப்பாக உள்ளதால் சமயோஜித புத்தியுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமை காப்பது நல்லது. கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பிரிந்து சென்ற உறவுகள் உங்களை தேடி வர வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேண்டிய வேண்டுதல் நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்த ஒரு விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. சுய தொழில் செய்பவர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நபர்கள் மூலம் வேண்டிய அனுபவங்கள் வெளியிடங்களில் கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வெற்றி அடையக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தது கிடைக்கும் என்றாலும் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். உடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புடன் இருப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமையப் போகிறது. நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய துணிச்சல் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு வேண்டியவர்களின் மூலம் கிடைக்க வேண்டிய உதவி தகுந்த சமயத்தில் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மேலும் சுப செய்திகளை பெறலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அறிவாற்றல் அதிகரிக்கும். சுய தொழிலில் ஏற்றம் காணலாம். ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.