தென்னிலங்கையில் 9 வயது சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கி, சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
தாயினால் சித்திரவதைக்கு உள்ளான மகள், கைகால்களில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடபில் பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.