தமிழகத்தில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் மணிகண்டன் (22). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் திருச்சியை சேர்ந்த பிளஸ்-2 படித்து வந்த 16 வயது சிறுமியிடம் பழகி வந்தார்.
பின்னர் அவர், திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை அவரிடம் தனிமையில் இருந்து வந்தார்.
இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அது தொடர்பில் மணிகண்டனிடம் கேட்டனர். அப்போது அவர் எனக்கு இது பற்றி தெரியாது என்றும், சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.
பின்னர் இது தொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.