கடந்த ஆண்டு இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு 90 கோடியே 37 இலட்சத்து 57 ஆயிரத்து 293 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்த கழிவுப் பொருட்கள் மன்னாரில் இருந்து ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையான கடற்பரப்பில் பரவியதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சமுத்திரபாதுகாப்பு சம்மந்தமான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அதற்கான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இவ்வாறான சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்கு, நீதியமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து துரிதமான நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.