இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் மாநகர பொலிஸ் தலைவருக்கு இரு பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அருண் குமார் என்பவர் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் 9 திருமணங்கள் செய்து கொண்டுள்ளதாகவும்,
ஆனால் அவரது மொபைல் அழைப்பு தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதும், அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு தள்ளியதும் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, திரைப்படங்கள் மீது அதிக நாட்டம் கொண்ட அருண் குமார், திரைப்பட வசனங்கள் பேசியே, பெண்களை தமது வலையில் வீழ்த்தியுள்ளார்.
ரகசியமாக திருமணம் செய்து கொள்ளும் அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளார்.
மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்து துன்புறுத்தியுள்ளார். அருண் குமாரிடம் சிக்கிய இரு பெண்கள் மகளிர் ஆணையத்தின் உதவியுடன் பொலிசாரை நாடிய பின்னரே, இந்த விவகாரம் அம்பலமானது.
புகாரளித்துள்ள இரு பெண்களும், அருண் குமாரின் முதல் இரு மனைவிகள் என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், அருண் குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள், நேரடியாக பொலிசாரை அணுகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விசாரணை துவங்கியுள்ள பொலிசார், அருண் குமாருக்கு பாலியல் தொழில் மற்றும் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும், அருண் குமார் தமது கணவரை கொலை செய்துள்ளதாக கூறி பெண் ஒருவர் அளித்த புகாரையும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
கொல்லப்பட்ட அந்த நபர் அருண் குமாரின் நண்பர் என்றே கூறப்படுகிறது. மேலும், அருண் குமாரின் குடியிருப்பில் இருந்து ஆபத்தான ஆயுதங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
மட்டுமின்றி, அருண் குமாருக்கு இந்த தொழிலில் உதவி செய்யும் நபர்கள் தொடர்பிலும் பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
தலைமறைவாகியுள்ள அருண் குமாரை கைது செய்யும் நடவடிக்கையில் தற்போது பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.