இறுதிப்போரில் முல்லைத்தீவு பதுங்கு குழி மூடிப் பார்வையை இழந்தவரின் வலிகளை சுமந்து வருகின்றது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி.
கொடிது கொடிது வறுமை கொடிது. அதனிலும் கொடிது பெற்றோர் உயிருடன் இருக்கையில் பிள்ளைகளை இழப்பது. உள்நாட்டு போரின்போது எம்மவர்கள் இழந்தவைகள் ஏராளம்.
உடமைகள் பலவும் இழந்தும் ஏதோரு ஒரு நம்பிக்கையில் வாழ்க்கை இன்னும் நகர்ந்துகொண்டே செல்கின்றது. பலரும் போர் வடுக்களை சுமந்து தமது அன்றாட வாழ்விற்கே கஸ்ரப்படும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் மல்லாவி மங்கை நகரில் வாழும் ஒரு குடும்பத்தின் துயரங்களை உங்கள் கண் முன்னே இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சி தருகின்றது.