முப்படையினரை பணிக்கு அழைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு
நேற்றையதினம் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தல் (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவினால் தனக்குரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.