இலங்கையில் தங்க விலையானது தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது.
சர்வதேச சந்தையில் தங்க விலையானது மூன்றாவது நாளாக 1800 டொலர்களுக்கு சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன.
இதன்போது கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரப்படி செய்கூலி சேதாரத்துடன் சேர்த்து 22 கரட் தங்க நகையொன்றின் விலையானது சுமார் 2 இலட்சம் ரூபாவாக காணப்படுகிறது.
தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக இருந்து வரும் நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு பெரியளவில் மாற்றமின்றி, 1790.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
எதிர்வரும் நாட்களில் தங்க விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும், டொலரின் மதிப்பு தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதன் காரணமாக தங்கம் விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளதுடன்,பின்னர் அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் இலங்கையில் தங்க விலையில் பாரியதொரு மாற்றம் பதிவாகியுள்ள சூழ்நிலையில் இது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரியொருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவது செயற்கையான நிகழ்வு.
இதனால், தங்க கொள்வனவில் நுகர்வோர் ஆர்வம் காட்டாததன் காரணமாக எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறையும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.