பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவித்தலினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை
தேசிய அடையாள அட்டை இல்லாதபட்சத்தில் வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தை முன்வைக்கும் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
எனினும், குறித்த ஆவணத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது