யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் எஸ். விஜயசிங்க (வயது 26) எனும் இராணுவ சிப்பாய் தூக்கத்தினால் இறங்க வேண்டிய புகையிரத நிலையத்தை தவற விட்டமையால் , மற்றைய புகையிரத நிலையத்தில் அவசரமாக இறங்க முற்பட்ட இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளார்.
குறித்த சிப்பாய் தனது ஊரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடமைக்காக கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதத்தில் வந்துள்ளார்.
திடீரென தூக்கத்தினால் எழுந்தவர் புகையிரதம் சுன்னாகம் புகையிரத நிலையத்தில் தரித்து நிற்பதனை அவதானித்து , தூக்க கலக்கத்துடன் அவசரமாக இறங்க முற்பட்ட போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்