புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பல்லம பிரதான வீதியின் எலகல்பிட்டிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் எலகல்பிட்டிய, அடிப்பல பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆராச்சிக்கட்டுவ பகுதியை நோக்கிப் பயணித்த லொறியொன்றும், எதிர் திசையில் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விபத்துச் சம்பவம் தொட்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.