தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 19.1 கி.மீ பகுதியிலுள்ள பரகஸ்தோட்டை பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த 74 வயதான பெண் ஒருவரை ஏற்றிச் சென்ற மகிழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த மகிழுந்து கடவத்தை அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக நுழைந்து, மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இடதுபுற பாதுகாப்பு வேலியில் மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
விபத்தின் போது மகிழுந்தில் ஐந்து பேர் பயணித்துள்ளதுடன் சம்பவத்தில் வயோதிப பெண் மாத்திரமே காயமடைந்துள்ளார்.
காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் தலையீட்டில், காயமடைந்த பெண் நோயாளர் காவுகை வண்டியில் நாகொட வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
வாகன சாரதி உறங்கியதால் அல்லது அதீத வேகம் காரணமாகவோ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலை களனிகம காவல்துறை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.